பிரபாகரனின் இறப்பு - ஆதாரங்கள் உள்ளது பாதுகாப்பு அமைச்சு

srilanka tamil news


விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்து விட்டதை உறுதிப்படுத்தும் முகமான ஆதாரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் இருப்பதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே, இதனை அவர் தெரிவித்துள்ளார்.



இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் நாட்டின் பாதுகாப்பின் அடிப்படையில் கொண்டு வெளியிடாமல் இருப்பதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.



வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்து உள்ளதை உறுதிப்படுத்தும் முகமாக  பிரபாகனுடன் மிக நெருக்கமான செயல்பட்ட கருணா அம்மன், தயா மாஸ்டர் உள்ளிட்டவர்கள் அவர் உயிரிழந்ததை சாட்சி என அவர் கூறியுள்ளார்.



இந்த விடயத்தை இனி மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டே இருப்பதை விடுத்து நாட்டின் முக்கியத்துவம் செலுத்த வேண்டிய பல்வேறு காரணிகள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்