ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
இலங்கையுடன் தற்போதுள்ள இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் திரு.ஹயாஷி யோஷிமாசா உள்ளிட்ட ஜப்பானிய தூதுக்குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனர்.
இந்த விஜயத்தின் போது ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய தலைவர்களை சந்திக்க உள்ளார்.
இதன் மூலம் ஜப்பானுடனான மறு முதலீட்டை ஊக்குவிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
Tags:
srilanka



