பறவையின் இரண்டாவது இடத்தில் உள்ள உலகிலேயே மிக ஆபத்தான பறவையான இரட்டை வாட்டில் காசோவரி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இலங்கை தாய்லாந்து நாடுகளுக்கு இடையிலான விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் மூன்று பறவைகள் கொண்டு வரப்பட்டுள்ளன..
உலகின் மிக ஆபத்தான பறவை என பெயரிடப்பட்ட காசோவரி பறவை சுமார் 5 அடி உயரம் வரை வளரும் மற்றும் 60 கிலோ எடை கொண்டது.
பறவையானது தெஹிவளையில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு ஆண் பறவைகளும் ஒரு பெண் பறவையும் காணப்படுகிறது.
ஏற்றுமதி
விலங்குகள் பரிமாற்றத்தின் திட்டத்திற்கு அமைய குரங்குகள், காட்டுப் பறவைகள், பாம்புகள் உள்ளிட்ட பல வகையான விலங்கு இனங்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது.
நேற்றைய தினம் கொண்டுவரப்பட்டுள்ள குறிப்பிட்ட பறவை இனம் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒரு மாதத்திற்கு பின்னர் பொதுமக்கள் பார்வையிடலாம் என தெஹிவளை மிருக காட்சிசாலையின் பிரதி பணிப்பாளர் தினுசிக்கா மானவடு தெரிவித்துள்ளார்.