சிலுவையை மதுபோதையில் உடைத்த இளைஞன் கைது!

jaffna news-tamillk


 ( jaffna tamil news-tamillk ) யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த சிலுவையை மது போதையில் உடைத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 


இந்த கைது சம்பவம் நேற்று நேற்றைய (26) தினம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவது

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த சிலுவையை மது போதையில் இளைஞன் ஒருவர் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.




அது தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்