யாழ்ப்பாணத்தில் - காங்கேசன்துறை அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகருக்கு எதிராக இன்றையதினம் (2) போராட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.
நாளைய தினம் (03) போயா தினத்தை முன்னிட்டு குறித்த விகாரையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றவுள்ள நிலையில் குறித்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டம் ஆனது நாளைய தினமும் தொடரும் என கூறப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடரும் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட சட்டதரணையுமான கனகரத்தினம் சுகாஸ், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் இந்தப் போராட்டத்தை வலுப்படுத்தும் முகமாக சமூக அக்கறை உள்ளவர்கள் அனைவரையும் அழைத்து நிற்பதாக ஏற்பாட்டார்கள் தெரிவித்துள்ளனர்.