விண்வெளியில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நாசா விஞ்ஞான குழுவொன்று முக்கிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இலங்கை வந்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகளும், இலங்கையில் காணப்படும் கற்பாறைகளும் ஒன்றாக காணப்படுகின்ற தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள குறித்த விஞ்ஞான குழு இலங்கைக்கு வந்துள்ளது.
நாசாவின் ஆய்வுக்குழு
இலங்கையை சேர்ந்த நாசாவின் மூத்த விஞ்ஞானியான சுனிதி கருணாதிலக தலைமையிலான நிபுணர் குழு இலங்கைக்கு வந்துள்ளது.
குறித்த ஆய்வுகளுக்காக இந்த விஞ்ஞான குழு இலங்கையின் கினிகல்பலஸ்ஸ பிரதேசத்தில் கண்காணிப்பு பயணத்தை ஆரம்பித்து பின்னர் இந்திகொலபலஸ்ஸ,உஸ்ஸங்கொட ஆகிய பகுதிகளுக்கு ஆய்வுகளுக்காக பயணம் செய்யவுள்ளது.
Tags:
srilanka