நாளொன்றுக்கு நாட்டைவிட்டு வெளியேறும் 15 ஆயிரம் பேர்

 


இலங்கையில் தற்போது வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 15,000 ஐ நெருங்குவதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிப்பதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

கண்காணிப்பு

இதன்காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 இடங்களில் இருந்த பயணிகளுக்கான ஸ்கான் சோதனை 2 இடங்களில் மட்டும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையமும், விமான நிறுவனமும் கூறுகின்றன.



இதேவேளை, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 446 கமராக்களில் இருந்து பெறப்பட்ட படங்கள் உட்பட பாதுகாப்பு சி.சி.டி.வி. கமரா அமைப்புடன் கூடிய குழு மூலம் 24 மணி நேர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், புறப்படும் மற்றும் வருகை முனையங்களில் சாதாரண உடையில் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் முப்படையைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்