பாக்கிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயங்களையும் கிறிஸ்தவர்களின் வீடுகளையும் தீக்கிரை

 

மதநிந்தனையில் ஈடுபட்டார்கள் என குற்றம்சாட்டி ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பாக்கிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயங்களையும் கிறிஸ்தவர்களின் வீடுகளையும் தீக்கிரையாக்கியுள்ளனர்.

tamillk news


 கிழக்கு பஞ்சாப்பின் ஜரன்வாலாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குரானை அவமதித்தார்கள் என்ற குற்றச்சாட்டி பெருமளவு மக்கள் இந்த வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர்.


நான்கு கிறிஸ்தவ தேவாலயங்களும் தேவாலயங்களுக்கு சொந்தமான பல கட்டிடங்களும் எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



அவர்கள் எங்கள் வீடுகளின் ஜன்னல்கள் கதவுகளை உடைத்தார்கள் குளிர்சாதனப்பெட்டி கதிரைகள் உட்பட ஏனைய பொருட்களை எடுத்துவந்து  கிறிஸ்தவ தேவாலயத்தின் முன்னாள் போட்டு எரித்தார்கள் என தனது வீட்டிலிருந்து தப்பியோடிய யசீர் பட்டி  என்ற 31 வயது கிறிஸ்தவர் தெரிவித்துள்ளார்.


அவர்கள் பைபிளையும் கொழுத்தினார்கள் ஈவிரக்கமற்றவர்களாக காணப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.



பொலிஸாரின் முன்னிலையில் கிறிஸ்தவர்களின் கட்டிடங்கள் அழிக்கப்படுவதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்