கொழும்பில் வவுனியாவைச் சேர்ந்த தமிழ் இளைஞன் அடித்துக் கொலை!

 


கொழும்பில் தமிழ் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த சம்பவமானது கொழும்பு மோதரையில் நேற்று(18.08.2023) மாலை இடம்பெற்றதாக தெரிய வந்துள்ளது.

வவுனியாவைச் சேர்ந்தவரும் வெல்லம்பிட்டியில் வசிப்பவருமான 24 வயதுடைய அருணாசலம்   என்ற இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


அவ் இளைஞர் கொழும்பில் கடந்த 5 வருடங்களாகக் குடும்பத்தினருடன் தங்கி நின்று வேலை புரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இரு குழுக்களுக்கிடையில் நேற்று ஏற்பட்ட மோதலில் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

vavuniya news

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்