மாத்தறை – கம்புறுபிட்டிய பிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்து 5 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச துயர சம்பவம் இன்று (16) காலை இடம்பெற்றுள்ளது.
சிறுமி முன்பள்ளிக்குச் செல்வதற்காகக் குளித்துக் கொண்டிருந்தபோதே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சடலத்தை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காகக் கம்புறுபிட்டிய வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
srilanka