வவுனியாவில் பாடசாலை வளாகத்தில் காட்டு யானையொன்று வந்தால் பதற்றம்!

வவுனியா வடக்கு மருதொடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திற்குள் இன்று(16) காலை காட்டு யானையொன்று புகுந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கிராம மக்கள் ஒன்றினைந்து குறித்த காட்டுயானையைக் அவ்விடத்தில் இருந்து காட்டுக்குள் விரட்டியதாக கூற்ரப்படுகின்றது. 

எனினும் அந்த யானையானது அக் கிராமத்தினை அண்டிய பகுதியிலேயே தொடர்ந்து சுற்றிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் குறித்த யானையின் காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் தகவலை வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

(vavuniya tamil news)

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்