வவுனியா பொது வைத்தியசாலையில் பரபரப்பு ஏற்படுத்திய விவகாரம் - விசாரணை குழு நியமனம்



( vavuniya news - tamillk news)  வவுனியா பொது வைத்தியசாலையில் சிசுவொன்றுக்கு சிகிச்சை அளிப்பதில் தாதியர் நடந்துகொண்ட விதம் மற்றும் தாதிய உத்தயோகத்தர்கள் தமது கடமையை சீராக செய்யவில்லை  தொடர்பில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

விசாரணை

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய வட மாகாண ஆளுனர் உத்தரவின் போரில் மூவர் கொண்ட குழு வடமாகாண சுகாதார பணிப்பாளரால் நேற்றைய தினம் (15.08.2023) நியமிக்கப்பட்டுள்ளது.

முரண்பட்ட நிலையில்

வவுனியா வைத்தியசாலையில் கடந்த 4 ஆம் திகதி குழந்தை குழந்தை பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவருடன் பிரசவ விடுதியில் கடமையிலிருந்த தாதிய உத்தியோகத்தர் ஒருவர் முரண்பட்ட நிலையில் குழந்தை பிறந்த பின்னரும் குறித்த முரண்பாடு தொடர்ந்து நிலையில் அவ்விடயம் தொடர்பாக குழந்தையின் தந்தையால் குறித்த சம்பவத்தை முகப்புத்தகத்தில் பகிரப்பட்டிருந்தது.

பரப்பரப்பை ஏற்படுத்தியது

இதன் காரணமாக வவுனியா சுகாதார வட்டாரத்திலும் மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் வட மாகாண ஆளுனரின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டிருந்தது.



இதன் தொடர்ச்சியாக ஆளுனரின் ஆலோசனைக்கமைய வட மாகாண சுகாதார பணிப்பாளர் இன்று (16.08.2023) காலை வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தந்து வைத்தியசாலையில் கலந்துரையாடியதுடன் குறித்த சம்பவத்தை முழுமையாக விசாரணைகளை மேற்கொள்ள அதற்காக மூவர் கொண்ட குழுவும் விசாரணைக்காக நியமித்துள்ளார்.

(vauniya tamil news)

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்