களுத்துறையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - tamillk news

 Srilanka tamil news - tamillk news

tamillk news


களுத்துறை சிறிகுருச பாடசாலைக்கு முன்பாக நேற்று (22) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை சிறிகுருச பாடசாலைக்கு அருகில் உள்ள பாதசாரி கடவையில் வீதியை கடந்தவர் மீது காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த அய்யப்புலி யேசுதாசன் என்ற 54 வயதுடைய நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முன்னாள் கடற்படை சிப்பாய் மற்றும் அவரது 17 வயது மகளும் காயமடைந்த நிலையில் களுத்துறை நாகொடை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்