srilanka tamil news
கடலுணவுகளை தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) சந்தித்து கலந்துரையாடினார்.
கடற்றொழில் அமைச்சில் இன்று(21) நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது புலம்பெயர் நாடுகளை சேர்ந்த தனியார் முதலீட்டாளர்களின் பிரதிநிதிகள் குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர்.
சர்வதேச சந்தைகளுக்கு கடலுணவுகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டிற்கு தேவையான அந்நியச் செலாவணிகளை பெற்றுக்கொள்வதுடன், கடற்றொழில் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தினையும் வலுப்படுத்த முடியும் என்பதை அதிகாரிகள் மத்தியில் வலியுறுத்தி வருகின்ற கடற்றொழில் அமைச்சர், புலம்பெயர் முதலீட்டாளர்களின் பங்களிப்பிற்கான கோரிக்கையை முன்வைத்து வருவதுடன் தனியார் முதலீட்டாளர்களுக்கான ஒத்துழைப்பினையும் ஊக்குவிப்பினையும் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
srilanka tamil news- tamillk news