வாகன இலக்கத்தகடு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு.....!

  நீண்டகாலமாக நிலவும் வாகன இலக்கத்தகடு பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

Tamil lk News


அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட டெண்டர் குழு,கிடைப்பெற்ற டெண்டர்களை மீளாய்வு செய்து வருகிறது. குறித்த குழு டெண்டர் ஏலங்களை அதிகாரப்பூர்வமாகத் திறந்து சிறந்த வழங்குனரை விரைவில் அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



 இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,''இந்த நடவடிக்கை முடிந்ததும், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் அனைத்து வாகனங்களுக்கும் அதிகாரப்பூர்வ இலக்க தகடுகளை விநியோக்கும்.



 தற்போது, ​​15,000 க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் வான்கள் மற்றும் 80,000 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு அதிகாரப்பூர்வ இலக்க தகடுகளை வழங்கப்படவுள்ளன.



இந்த ஆண்டு பெப்ரவரியில் தனியார் வாகன இறக்குமதிக்கான தடை நீக்கப்பட்ட பின்னர் இந்த வாகனங்கள் அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டனவாகும்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்