srilanka tamillk news
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா, தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் கெப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து இன்று திங்கட்கிழமை (21) இடம்பெற்றுள்ளது. கொழும்பு பிலியந்தலையிலிருந்து நுவரெலியா நகருக்கு பயணித்த கெப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.
இந்நிலையில், கெப் வாகனத்தில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
srilanka tamil news-tamillk news