மின்சாரம் துண்டிக்கச் சென்ற ஊழியர் மீது கட்டையால் தாக்குதல்! Tamillk news

 Srilanka tamil news-tamillk

 வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற இரு தொழிலாளியை நாய்க் கூடத்தில் இருந்த பலகையால் குறித்த வீட்டின் உரிமையாளரின் மகன் தாக்கிய காணொளி சமூகவலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

tamillk news


குறிப்பாக இந்த சம்பவம் நேற்று (21) தலாவ ஜெயகங்கை பிரதேசத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில் சம்பவம் தொடர்பில் தலாவ பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதன் போது மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என்றும் அன்றைய தினம் நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்துவதாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.


இந்நிலையில் கெக்கிராவ மின்சார அதிகார சபைக்குட்பட்ட தலாவ ஜயகங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் இருவர்  மின்சாரத்தை துண்டிக்க சென்றுள்ளனர்.



இருப்பினும் மின்சார அதிகார சபையிலிருந்து உரிய உத்தரவு வந்துள்ளதால், மின்வெட்டை கட்டாயம் செய்ய வேண்டும் என கூறிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டிக்க முற்பட்டனர்.



இதனால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளரின் மகன், அருகில் இருந்த பலகையால் மின்சாரத்தை துண்டிக்க முயன்ற நபரை கடுமையாக தாக்கியுள்ளார். அந்த சம்பவத்தின் போது எடுக்கபட்ட காணொளியும் பொலிஸாடம் ஒப்பட்டைக்கபட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்