Trincomalee tamil news-tamillk
திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள இறங்குதுறையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் உள்ளிட்ட குழுவொன்று காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 15 பேர் முகாமில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
முகாமைப் பார்வையிடச் சென்ற கல்கமுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்களும் அவர்களுடன் சென்ற பெரியவர்கள் குழுவும் இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.