12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் - Rasi palan - tamillk news

 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் 11-09-2023


12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் - Rasi palan - tamillk news
12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் - Rasi palan - tamillk news

மேஷம்: புது வாகனம், நவீன ரக செல்போன் வாங்குவீர்கள். உறவினர்கள் சிலர் உங்கள் அதிரடியான வளர்ச்சியை கண்டு பொறாமைப்படுவார்கள். எக்காரியத்திலும் நிதானம் அவசியம்.


ரிஷபம்: எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். மன உறுதி கூடும். இழுபறியாக உள்ள பழைய பிரச்சினைகளுக்கு உங்கள் வித்தியாசமான அணுகுமுறையால் சுமுக தீர்வு காண்பீர்கள்.


மிதுனம்: சந்தர்ப்ப சூழ்நிலையை புரிந்துகொண்டு சமயோசிதமாக பேசும் சாமர்த்தியம் வரும். பண வரவு, பொருள் வரவு உண்டாகும். பழுதான வீடு, கடையை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள்.




கடகம்: தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகள் வந்துபோகும். யாருக்கும் பணம், நகை வாங்கி தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.

சிம்மம்: எதிர்பாராத செலவுகள் இருக்கும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள். வாகனம், வீடு வகையில் பராமரிப்பு செலவு அதிகமாகும். பேச்சில் கவனம் தேவை.


கன்னி: புதிய தெம்பு, உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி உண்டாகும். அலைச்சல், அசதி குறையும். வாகனம் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டு.


துலாம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். செலவுகளை குறைத்து, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். விஐபிகளுடன் சகஜமாக பேசி காரியத்தை முடிப்பீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும்.


விருச்சிகம்: எதிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். குலதெய்வ கோயிலுக்கு சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள்.


தனுசு: பழைய கடன் பற்றிய கவலைகள் அவ்வப்போது வந்துபோகும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிப்பது நல்லது. யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். ஆன்மிக நாட்டம் கூடும்.




மகரம்: உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் சிலர் உங்களை கலந்துபேசி, முக்கிய முடிவு எடுப்பார்கள். நவீன ஆடியோ, வீடியோ சாதனம் வாங்குவீர்கள்.


கும்பம்: எதையும் சமாளிக்கும் துணிச்சல், சாமர்த்தியம் பிறக்கும். பழைய கடனை தீர்க்க தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். நிலுவையில் இருந்த வழக்கில் சாதகமான திருப்பம் ஏற்படும்.


மீனம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பூர்வீக சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். மரியாதை, அந்தஸ்து உயரும்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்