யாழில் தாய் மற்றும் மகள் மீது வாள் வெட்டு - வைத்தியசாலையில் அனுமதி Tamillk News

 Jaffna tamil News - நீர்வேலி பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த தாயும் மகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


tamillk news-jaffna tamil news
யாழில் தாய் மற்றும் மகள் மீது வாள் வெட்டு -  வைத்தியசாலையில் அனுமதி


நீர்வேலியை சேர்ந்த கணேசரத்தினம் வேனுஜா (வயது 24) மற்றும் அவரது தயாரான கணேசரத்தினம் யோகேஸ்வரி (வயது 65) ஆகிய இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வீட்டில் தாயும் மகளும் இருந்த வேளை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இருவர், தாய் மற்றும் மகள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.




சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் தனிப்பட்ட பகை காரணமாகவே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்