கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம் Vavuniya News - Tamillk News

 Vavuniya Tamil News - வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

tamillk news


குறித்த நபர் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற போதே நேற்று (01) கரடி தாக்குதளுக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.


 கரடியிடம் இருந்து தப்பி வந்த அவரை அயலவர்கள் மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.



கரடியின் தாக்குதலுக்கு உள்ளான குறித்த குடும்பஸ்தர் கண் ஒன்றை இழந்துள்ளதுடன், தலையிலும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.



குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா, சிதம்பரபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்