யாழில் மரம் முறிந்து விபத்து: அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சாரதி - tamillk news -jaffna tamil news

jaffna tamil news - tamillk news
 jaffna tamil news -யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக பாரிய மரம் முறிந்து வீழுந்ததில் ஒருவர் காயமடைந்து அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த சம்பவம் இன்று (28.09.2023) இடம்பெற்றுள்ளது.



 யாழ்.பொது நூலகத்திற்கு முன்னாலுள்ள யாழ்.மாநகர சபையின் சிறுவர் பூங்காவில் பாரிய பல மரங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்த பூங்காவிற்குள் இருக்கின்ற மரங்களின் கீழ் வீதியால் செல்கின்ற பொது மக்களும் வாகனங்களுடன் அந்த வாகனங்களின் சாரதிகள் பலரும் நிழலுக்காக தங்கி நிற்பது வழமையாக அவதானிக்கக் கூடிய விடயமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




அப்போது அடித்த பலமான காற்றினால் நீண்ட கால பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.


அங்கு நின்றிருந்த முச்சக்கர சாரதி மேல் மரம் முறிந்து விழுந்ததில் முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்ததுடன் அதன் சாரதி காயங்களுடன் தப்பியுள்ளார்.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்