மன்னாரில் காற்றாலை அமைக்க காணி சுவீகரிப்பு: மக்கள் எதிர்ப்பு Tamillk News

 

tamillk news
மன்னாரில் காற்றாலை அமைக்க காணி சுவீகரிப்பு

Manner Tamil News - மன்னார் தீவில் பேசாலை பகுதியில் காணி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் பேசாலை மேற்கு கிராம அலுவலகப் பிரிவில் தனியார் காணி பகுதியில் நேற்றையதினம் (06.09.2023) இடம்பெற்றுள்ளது.



காணி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் தீவில் பேசாலை பகுதியில் காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு காணியை அடையாளப்படுத்தும் நோக்குடன் மன்னார் பிரதேச செயலகத்தில் இருந்து அதிகாரிகள் வருகை தந்து மன்னார் பிரதேச செயலாளரினால் அறிவுறுத்தப்பட்ட மும்மொழி கொண்ட அறிவுறுத்தல் விளம்பரம், சம்பந்தப்பட்ட காணியில் பார்வைக்கு ஓட்டப்பட்டது.


குறித்த அறிவித்தல் பிரசுரத்தில் 'மன்னார் காற்று மின் செயற்றிட்டம் இரண்டாம் கட்டமாக தேவையான புதிய காற்றாலைகளை பொருத்துவதற்கும் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை நிர்மானிப்பதற்கு இக்காணி சுவீகரிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அறிந்த காணி உரிமையாளர்கள், பேசாலை பங்குத்தந்தை அருட்பணி அன்ரன் அடிகளார் உட்பட கிராம மக்கள் சிலர் சம்பவ இடத்துக்குச் சென்று காணி அபகரிப்புக்கு எதிராக குரல் எழுப்பினர்.

tamillk news


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்