125 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது-jaffna tamil news - tamillk news


jaffna tamil news-tamillk news
 

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் 125 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 



காரைநகர் கடற்பகுதியில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கு இடமான படகொன்றினை கடற்படையினர் சோதனையிட முயன்ற போது ,  படகில் இருந்த நபர்கள் தப்பி சென்றுள்ளனர். 


தப்பி சென்றவர்களில் ஒருவரை கடற்படையினர் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட நபரை படகின் அருகில் அழைத்து சென்று படகினை சோதனையிட்ட போது படகில் மூன்று உரைப்பைகளில் கஞ்சா பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. 




மீட்கப்பட்ட கஞ்சாவின் தொகை சுமார் 125 கிலோ கிராம் , எனவும் தம்மால் கைது செய்யப்பட்ட நபரையும் , மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர். 

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்