திருகோணமலையில் விறகு வெட்ட சென்றவரை கரடி தாக்கிய சம்பவம் - tamillk news

trincomalee tamil news-tamillk news
 

திருகோணமலையில் கரடி தாக்குதலுக்கு உள்ளான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த சம்பவம் திருகோணமலை - திரியாய் காட்டுப்பகுதியில் இன்று (28.09.2023) மாலை இடம் பெற்றுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதன் போது படுகாயமடைந்தவர் கும்புறுபிட்டி - நாவல்சோலை பகுதியைச் சேர்ந்த 41 வயதையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான என். செல்வராசா என தெரிய வருகின்றது.



அத்துடன் படுகாயம் அடைந்து நபர் விறகு வெட்டுவதற்காக காட்டுக்குச் சென்ற நிலையில் கரடி தாக்கியதால் சுய நினைவற்ற நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.




மேலும் குறித்த பிரதேசத்தில் கரடிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

trincomalee tamil news


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்