இரத்மலானை துப்பாக்கிச் சூட்டின் சி.சி.டி.வி வௌியானது ! Tamillk News

 Srilanka Tamil News - இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (10) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வௌியாகியுள்ளன.

tamillk news -srilanka tamil news
இரத்மலானை துப்பாக்கிச் சூட்டின் சி.சி.டி.வி வௌியானது ! Tamillk News


இன்று அதிகாலை 4.30 மணியளவில் இரத்மலானை ஞானேந்திரா வீதியில் உள்ள விஜயராம விகாரைக்கு அருகில் ரயில் பாதையை அண்மித்த பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.


விமுக்தி நுவன் சம்பத் பெரேரா என்ற 34 வயதுடைய மீனவர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.


மீன்பிடித் தொழிலை முடித்துக் கொண்டு குறித்த நபர் வீடு திரும்பியிருந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் குழுவொன்று அங்கு வந்துள்ளது.




அவர்களில் நான்கு பேர், தங்களை பொலிஸ் அதிகாரிகள் என அடையாளப்படுத்திக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்த நிலையில், அவர்களிடம் கைவிலங்கு இருந்தமை சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.


அப்போது, ​​வீட்டை சோதனை செய்துவிட்டு, வீட்டில் இருந்த 34 வயது மீனவரை அழைத்துச் செல்ல வேண்டும் என்றனர்.


பின்னர் குறித்த மீனவரை அழைத்து சென்ற போது  ரயில் பாதைக்கு அருகில் முறுகல் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




அப்போது, ​​வந்தவர்களில் ஒருவர் வைத்திருந்த கைத்துப்பாக்கியில் அவரை சுட்டுள்ள நிலையில், அவரின் தொடை மற்றும் வயிற்றை பகுதியில் இதனால் காயம் ஏற்பட்டுள்ளது.


காயமடைந்த மீனவரை உடனடியாக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்த வந்த குழுவினர் மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்