எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றம்! Tamillk News

tamillk news
எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றம்! Tamillk News


Srikanka Tamillk News -  எரிபொருள் விலையை நாளாந்தம் திருத்தம் செய்யும் முறைமையை அடுத்த வருடம் முதல் தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


அமைச்சர் தனது x கணக்கில் குறிப்பொன்றை இட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


பெற்றோலிய கூட்டுத்தாபன விநியோகஸ்தர்கள் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.



அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், எரிபொருள் விநியோகம் மற்றும் புதிய எரிபொருள் நிலையங்களின் எதிர்கால அபிவிருத்தி குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.


எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தானியங்கி கணினிமயமாக்கப்பட்ட  முறைமையில் மாற்றுவது குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்