இலங்கையில் 34600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட கிம்புலா பகிம்புலா பனிஸ்..! Tamillk News

 

tamillk news-srilanka tamil news
இலங்கையில் 34600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட கிம்புலா பகிம்புலா பனிஸ்..! Tamillk News

Srilanka Tamil News - தம்புள்ள பிரதேசத்தில் கிம்புலா பனீஸ் எனப்படும்  பனிஸ் வகையொன்று 34600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.


தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்தையொன்றில் இவ்வாறு குறித்த பனிஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 


இந்த பனிஸை ஜெர்மன் பிரஜைகள் சிலர் கொள்வனவு செய்துள்ளதாக தெரியவருகிறது.


தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த சிலருக்கும் ஜெர்மனிய பிரஜைகளுக்கும் இடையில் இந்த பனிஸை கொள்வனவு செய்வது தொடர்பில் ஏலம் நடைபெற்றுள்ளது.


இந்த ஏல விற்பனையில் ஜெர்மனிய பிரஜைகள் 34600 ரூபா விலையை நிர்ணயித்து அதனை கொள்வனவு செய்துள்ளனர்.



இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட பனிஸை பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு ஜெர்மனிய பிரஜைகள் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.


இதற்கு முன்னர் கலேபிந்துனுவெவ பகுதியில் இவ்வாறான ஓர் ஏல விற்பனையில் ஒரு கிம்புலா பனிஸ் 22200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்