srilanka tamil news - அம்பலாங்கொட, மிட்டியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 5.45 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் மிட்டியகொட மாகவெல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது ஒரு காலில் தொடை பகுதியில் சுடப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.
Tags:
srilanka



