திருகோணமலையில் சிங்கள மொழியில் தோன்றிய பெயர் பதாகையால் பெரும் பரபரப்பு -Trincomalee Tamil News - Tamillk News

 

tamillk news - trincomalee tamil news
திருகோணமலையில் சிங்கள மொழியில் தோன்றிய பெயர் பதாகையால் பெரும் பரபரப்பு

Trincomalee Tamil News - திருகோணமலை, இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரைக்கான பதாகை நடப்பட்டமையால் அப்பகுதியில் குழப்ப நிலையொன்று உருவாகியுள்ளது.


 நிலாவெளி பிரதான வீதியின் பெரியகுளம் சந்திக்கு அருகில் உள்ள இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர் பொறிக்கப்பட்ட பதாகை நடப்பட்டதையடுத்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறித்த பதாகை இன்று (09) காலை பௌத்த பிக்குகள் சிலரால் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது எனவும், பதாகை நடப்பட்டதன் பின் அப்பகுதியில் காவல்துறையினர் சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.



அந்த விகாரைக்கான பணிகளை இடைநிறுத்தக்கோரி ஆளுநரினால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.



மேலும் இலுப்பைக்குளம் பகுதியில் குறித்த விகாரை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை(03) பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்