எவ்வளவு தடைகள் வந்தாலும் நவம்பர் 27 உறவுகள் இறந்த நாளினை நினைவு கூருவோம்!ரவிகரன் தெரிவிப்பு! tamillk news

எவ்வளவு தடைகள் வந்தாலும் நவம்பர் 27 உறவுகள் இறந்த நாளினை நினைவு கூருவோம்!ரவிகரன் தெரிவிப்பு! tamillk news

எவ்வளவு தடைகள் வந்தாலும் நவம்பர் 27 உறவுகள் இறந்த நாளினை நினைவு கூருவோம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

இன்று அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் முல்லைத்தீவு பொலிஸாரால் தடையுத்தரவை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொடிகளை அகற்றுமாறும்,  அலங்கார வேலைகள் இருக்க கூடாதென்றும், பாடல்கள் ஒலிபரப்பக்கூடாது என விரட்டியதாக எனக்கு தகவல் தெரிவித்திருந்தார்கள்.

இதேபோல் தேவிபுரம், முள்ளிவாய்க்கால், அளம்பில், முள்ளியவளை போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்தும் இவ்வாறான இடம்பெற்றிருந்ததாக அறியத்தந்திருந்தார்கள்.

நீதிமன்ற கட்டளைகளை மதிக்கின்றோம்

இருப்பினும் மக்கள் சில விடயங்களை கதைத்து முடிவு எடுத்திருக்கின்றார்கள்.

அளம்பில் துயிலும் இல்லத்தில் வைத்து எனக்குரிய தடையுத்தரவை வழங்கியிருக்கிறார்கள்.  எவ்வளவு தடைகள், உத்தரவுகளை தந்தாலும் நவம்பர் 27 உறவுகள் இறந்த நாளினை நினைவுகூர்ந்து நடத்துவோம்.

நீதிமன்ற கட்டளைகளை மதிக்கின்றோம். அக்கட்டளைகளை மதித்து நாம் உறவுகளை நினைவு கூருவோம் என்றார்.

எவ்வளவு தடைகள் வந்தாலும் நவம்பர் 27 உறவுகள் இறந்த நாளினை நினைவு கூருவோம்!ரவிகரன் தெரிவிப்பு! tamillk news

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்