2024 ஜனவரி முதல் 18 வீத வரி! srilanka tamil news

 எதிர்வரும் முதலாம் திகதி (01.01.2024) முதல் பெறுமதி சேர் வரி (VAT) அறவிடப்படும் பொருட்களின் பட்டியல் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2024 ஜனவரி முதல் 18 வீத வரி! srilanka tamil news


சமையல் எரிவாயு, பெற்றோல், டீசல் உள்ளிட்டவைகளும் இந்த பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது. இரசாயன உரங்களையும் இந்த பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


உள்நாட்டில் தயாரிக்கப்படும் பால்மா, கையடக்க தொலைபேசிகள், வாகனங்கள், விளையாட்டு உபகரணங்கள், மின்சாதன பொருட்கள், உயர் தொழில்நுட்ப மருத்துவ சாதனங்கள், உள்நாட்டில் தயாரிக்கபடும் ஆபரணங்கள் உள்ளிட்டவைகளுக்கும் பெறுமதி சேர் வரி அறவிடப்படவுள்ளது.


இதேவேளை, பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது மற்றும் மூன்றாவது வாசிப்புகள் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டன.


அதன் இரண்டாம் வாசிப்பு 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் கிடைத்தன.


திருத்தங்களுடன் கூடிய மூன்றாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 100 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்