வாகனங்களின் சட்டபூர்வமான தன்மையை சரிபார்க்க புதிய நடைமுறை அறிமுகம்

tamil lk news


 இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதற்காக  இலங்கை சுங்கத்தினரால் இணையத்தள சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


இதன்படி, வாகனங்களின் செஸி எண்ணை உள்ளிடுவதன் மூலம் வாகனத்தின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இலங்கை சுங்கத்தின் பேச்சாளரும் மேலதிக பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.



நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் புழக்கத்தை குறைப்பது மற்றும் சந்தையில் வெளிப்படைத்தன்மையை வளர்ப்பது இதன் நோக்கமாகும் என சீவலி அருக்கொட தெரிவித்தார்.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்