பாலியல் ஊக்க மருந்துகளுடன் கொழும்பில் சேர்ந்த 61 வயது நபர் கைது! srilanka tamil news

 

பாலியல் ஊக்க மருந்துகளுடன் கொழும்பில் சேர்ந்த 61 வயது நபர் கைது! srilanka tamil news

இந்தியாவிலிருந்து மீன்பிடி படகின் மூலம் சட்ட விரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பாலியல் ஊக்க மருந்துகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு உட்பட்ட மேல் மாகாண ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஊக்க மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை பொலிஸாரின் அதிரடி தேடல்


கொழும்பு 12, கெசல்வத்தை (வாழைத் தோட்டம்) பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 


குறித்த நபரின் வீட்டை சோதனையிட்டபோது 31,750 பாலியல் ஊக்க மருந்துகளும் 259 பாலியல்  ஊக்கி ஜெல் பக்கெற்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.




மீட்கப்பட்ட பொருட்கள் வேறு ஒருவருக்கு கைமாறும் வரை இவ்வாறு இவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.




சந்தேக நபர் மாளிகாகந்த நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்