அம்பிட்டிய சுமனரத்ன தேரரால் மீண்டும் பதற்றம்! batticaloa tamil news

 மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதியை பார்வையிடச் சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காவல்துறை இன்றைதினம் அனுமதி வழங்காத நிலையில் குறித்த இடத்தில் பதற்றநிலை ஏற்பட்டது.

batticaloa tamil news


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் இன்றையதினம் குறித்த பகுதிக்கு சென்றிருந்தனர்.


இதனையடுத்து, குறித்த பகுதியில் பெரும்பாலான காவல்துறையினரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 




நிலையில், கஜேந்திர குமார் உள்ளிட்ட தரப்பினருக்கு மேய்ச்சல் தரை பகுதியை பார்வையிடுவதற்கு அனுமதியை வழங்கியிருக்கவில்லை.




இதன்போது, அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அந்த பகுதிக்கு பிரவேசித்த நிலையில் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் உள்ளிட்ட தரப்பினருக்கு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார்


இந்தநிலையில் அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்