மன்னார் மேல் நீதிமன்றம் : 14 வருடங்களுக்குப் பின் இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை! manner news

மன்னார் மேல் நீதிமன்றம் : 14 வருடங்களுக்குப் பின் இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை! manner news


 மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில்  கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது கடமையில் இருந்த 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், ஒருவர்  காயமடைந்த  சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்க்கு 14 வருடங்களின் பின்னர் மன்னார் மேல் நீதிமன்றம் இன்று (6) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 மனிதப் படுகொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்ட நிலையில்

மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் 02-அக்டோபர்-2009 அன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இராணுவ சேவையில் இருந்த போது இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு ஒருவர் படுகாயமடைந்தார்.


குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து மன்னார் மேல் நீதிமன்றத்தில் இடம் பெற்று வந்தது.


முருங்கன் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை தீர்ப்புக்காக  இன்றைய தினம் (6) மன்னார் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எம்.எம்.மிகால் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.




இதன் போது இரண்டு மனிதப் படுகொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்ட நிலையில், மேல் நீதிமன்ற  நீதிபதியால் குறித்த இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.



இத தீர்ப்பு வழங்கும் போது மேல் நீதிமன்றத்தின் அனைத்து மின் விளக்குகள் அணைக்கப்பட்டு நீதிமன்றத்தின் கதவுகள் பூட்டப்பட்டு தீர்ப்பு எழுதப்பட்டது.


எழுதப்பட்டதன் பின்னர் எழுதப்பட்ட பேனா நீதிபதியால் உடைக்கப்பட்டது.




இன்றைய தினம் குற்றவாளியை போகம்பரை சிறைச்சாலைக்கு அனுப்பும்படி கட்டளையிடப்பட்டது

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்