வவுனியாவில் மதுபோதையில் சென்ற குழுவினரால் துரத்தித் துரத்தி வாள்வெட்டு! vavuniya news

வவுனியாவில் மதுபோதையில் சென்ற குழுவினரால் துரத்தித் துரத்தி வாள்வெட்டு!  vavuniya news


 வவுனியா - ஓயார்சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் வைத்தியசாலையில்

நேற்று இரவு வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதிக்கு வாகனம் ஒன்றில் மதுபோதையில் சென்ற குழுவினர் அங்கு நின்ற இருவர் மீது துரத்தித்துரத்தி வாளால் வெட்டியுள்ளனர்.




இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.




சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதற்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்