(jaffna tamil news-tamillk) யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள டெங்கு நோய் நிலைமையை கட்டுப்படுத்த மேலதிகமாக அயல் மாவட்டங்களிலிருந்தும் யாழ்ப்பாணத்திற்கு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் டெங்கு தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதே இதனை தெரிவித்தார்.
வைத்தியசாலையில் அதிகளவான நோயாளர்கள்
டெங்குவை காவும் நுளம்புகள் வீரியம் மிக்க நுளம்புகளாக உள்ளதாக பூச்சியியல் ஆய்வ சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகளவான நோயாளர்கள் இருப்பதால் அதனை சூழவுள்ள பகுதிகளிலுள்ளவர்கள் அதிகளவாக அக்கறையுடன் இருக்க வேண்டும்.
நோய் நிலைமையை கட்டுப்படுத்த மேலதிகமாக அயல் மாவட்டங்களிலிருந்தும் சுகாதாரப் பரிசோதகர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தற்போது பரவியுள்ள டெங்கு தொற்றானது மூன்றாவது வகை நுளம்பின் மூலமே பரவுவதாகவும் இது இம்முறையே யாழ்ப்பாணத்தில் பரவியுள்ளதால் மக்கள் மத்தியில் இதற்கான தற்காப்பு வளங்கள் இல்லாதுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேநேரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 150 பேர் நாளாந்தம் டெங்கு சிகிச்சைக்காக வருகின்ற நிலையில் நேற்று 84 பேர் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இம்மாதம் 1,284 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் - என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



