(srilanka tamil news-tamillk) மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த பொருள் இன்று (28.12.2023) காலை கரை ஒதுங்கியுள்ளதாக அப்பகுதி கடற்றொழிலாளர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த மர்ம பொருள் தொடர்ச்சியாக இந்த இடத்திலேயே இருந்தால் தமது கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு பெரும் தடையாக அமையும் என அப்பகுதி கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனவே, இதனை சம்மந்தப்பட்டவர்கள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு இதனை களுவாஞ்சிகுடி பொலிஸாரும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர் என அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.
குறித்த பொருள் சிவப்பு நிறத்தில் கூம்பக வடிவில் போத்தல் போன்று பெரியதாக அமைந்துள்ளதுடன் பொருளின் மேற்பகுதியில பி.எம்.ரி. எனவும் பின்பக்கம் பி என்ற எழுத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
குறித்த பொருளில் ஒருபக்கம் சிறிய ரக ரயர் ஒன்று பொருத்தப்பட்டு அதில் இரும்பிலான சங்கிலியும் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



