இன்று நாட்டில் பல பகுதியில் மழை சாத்தியம்....! மக்களே அவதானமாக இருங்கள்...! srilanka tamil news

 

இன்று நாட்டில் பல பகுதியில் மழை சாத்தியம்....! மக்களே அவதானமாக இருங்கள்...! srilanka tamil news

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


மத்திய மற்றும் சப்ரகமுவ வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


ஊவா மற்றும் அம்பாறை மாவட்டத்தில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடி மின்னல் தாக்கங்களிலிருந்து அவதானமாக இருக்குமாறு  எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.




மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்