முதன்முறையாக தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர முகவரி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பிரகாரம் குருநாகல் மாவத்தகம கண்டி கந்த தோட்டத்திலுள்ள தொழிலாளர்களின் வீடுகளுக்கு விலாசங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர முகவரி வழங்குமாறு கோரி தோட்டத் தொழிலாளர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை பரிசீலித்த போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திருமதி கனிஷ்க டி சில்வா இதனைத் தெரிவித்தார்.



