மின் கட்டணம் அதிகரிக்கப்படும் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையினை தொடர்ந்து கடநமிண் கட்டணங்களும் பாரியளவில் அதிகரிக்கப்பட்டது.
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும்
இந்நிலையில் அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 வீதமாக அதிகரிக்கப்படவுள்ள வற் வரி எரிபொருள் விலை நிர்ணயத்தை நேரடியாகப் பாதிப்பதால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என சங்க செயலாளர் ரஞ்சன் ஜயலால் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் மின்சார உற்பத்திக்கான டீசல் போதுமான அளவு ஒதுக்கப்படவில்லை என்பதுடன் இதுவரையிலும் நாட்டு மக்களுக்கு பலன்கள் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.



