வவுனியா படுகொலை சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் கைது ! vavuiya news

 

வவுனியா படுகொலை சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் கைது ! vavuiya news

வவுனியா செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் கடந்த 30ம் திகதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கைது

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் எனவும் தெரிவிக்கப்படுகிறது.




சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




கடந்த 30ம் திகதி இடம்பெற்ற  படுகொலை சம்பவத்தில் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த 72 வயதுடைய பசுபதிவர்ண குலசிங்கமும், அவரது மனைவியான 68 வயதான கனகலட்சுமி என்பவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்