(srilanka tamil news-tamillk) 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் 04ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 2600இற்கும் மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ள்ளது.
பரீட்சை நுழைவுச் சீட்டு
இந்நிலையில் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர்கள் அரை மணித்தியாலத்திற்கு முன்னதாக தமது பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுந்தர கேட்டுக்கொள்கின்றார்.
பரீட்சைக்கு முகம் கொடுப்பதற்கு பரீட்சை நுழைவுச் சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது கட்டாயமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உயர்தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் விரிவுரைகள் என்பனவற்றை நடத்துவதற்கு கடந்த 29ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
srilanka



