வவுனியா நெடுங்கேணியில் வீட்டை தீயிட்டு கொழுத்தி பொருட்களையும் சேதப்படுத்திய நபர்! vavuniya news

(vavuniya tamil news-tamillk) நெடுங்கேணி 17ஆம் கட்டை பகுதியில் வீட்டினை தீயிட்டு கொழுத்திய நபர் ஒருவரை ஒட்டுசுட்டான் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

vavuniya tamil news


குறித்த நபர் அதேபகுதியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்தநிலையில் இருவருக்கும் இடையில் முரன்பாடு ஏற்ப்பட்டமையால் அந்த பெண் பிரிந்து தனியாக வசித்து வருகின்றார்.


இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபர் கடந்த சிலநாட்களாக அவரது மனைவியான அந்தபெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தி வருவதாக பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

முறைப்பாடு 

இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடு வழங்குவதற்காக அவசர பொலிசாருக்கு பலமுறை அழைப்பை ஏற்ப்படுத்தி அறிவித்திருந்தோம் இருப்பினும் அவர்கள் வருகைதரவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.

வீட்டினை தீயிட்டு

சம்பவம் தொடர்பாக இன்றையதினம் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாட்டினையும் பதிவுசெய்திருந்தனர். இந்நிலையில் குறித்த நபர் இன்று மாலை தனது மனைவியின் சகோதரியின் வீட்டுக்கு சென்று வீட்டினை தீயிட்டு எரித்துள்ளதுடன் அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கியுள்ளார்.



இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்துள்ளது. இதனையடுத்து ஒட்டுசுட்டான் பொலிசாரால் அந்நபர் கைதுசெய்யப்பட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்