மேஷம்: உங்களின் புகழ், கவுரவம் உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு அதிகரிக்கும். வாசனை திரவியம், கலை பொருட்கள் வாங்குவீர்கள். அரசியல் தலைவர்களின் நட்பு கிடைக்கும்.
ரிஷபம்: வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் புது வழிமுறைகளை கையாளுவீர்கள். மனதில் நிம்மதி பிறக்கும்.
மிதுனம்: நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தாரின் பேச்சுக்கு செவி சாய்ப்பீர்கள். அக்கம் -பக்கத்தினர் நேசக்கரம் நீட்டுவார்கள்.
சிம்மம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள். குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.
துலாம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். கோபம் குறையும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். பழைய வழக்கு சாதகமாகும்.
மகரம்: குடும்பத்தில் நிம்மதி தங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வேலைப்பளு குறையும்.
மீனம்: தவிர்க்க முடியாத செலவுகள் வந்து போகும். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களால் அன்புத் தொல்லை அதிகமாகும். நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தாமல் போய்விட்டோமே என்று ஆதங்கப்படுவீர்கள்.
ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்