யாழில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து!

  

Tamil lk News

Jaffna News

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதி, உரும்பிராய் கற்பக பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இன்றையதினம் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


மோட்டார் சைக்கிளும், காரும் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. 



இதன்போது மோட்டார் சைக்கிள் மற்றும் கார் என்பன பகுதியளவில் சேதமடைந்ததுடன், மோட்டார் சைக்கிளில் சென்றவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.



இந்த விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்