(srilanka tamil news-tamillk) மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு
நேற்று (17) இரவு மதுரங்குளிய – விருத்தோடை பகுதியில் மின்விளக்கு இன்றி செலுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர்.மதுரங்குளிய – விருதோடை பகுதியைச் சேர்ந்த கலீல் அஹமட் மெஹிதி என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் பதிவு செய்யப்படவில்லை எனவும்,
விபத்து இடம்பெற்ற போது மோட்டார் சைக்கிளின் விளக்குகள் இயங்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.படுகாயமடைந்த பாடசாலை மாணவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
மதுரங்குளிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
accident