Vavuniya News
வவுனியாவில்(Vavuniya) யானை தாக்குதலுக்குள்ளாகி நேற்று இரவு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றயதினம் இரவு பெரியதம்பனை பகுதியில் மோட்டார் சைக்கிளில், பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை வீதியில் நின்ற காட்டு யானை தாக்கியுள்ளது.
இதனால் படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் நட்டாங்கண்டல் பிரதேசத்தை சேர்ந்த ச.உதயராசா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
அவரது சடலம் பெரிய பண்டிவிரிச்சான் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை பறையனாலங்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.