(srilanka tamil news-tamillk) நாடளாவிய ரீதியில் தேங்காய் அறுவடையில் பற்றாக்குறை நிலவுவதால் சந்தையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தென்னை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மோசமான வானிலை காரணங்களால் தேங்காய் அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனமழையும் வறண்ட வானிலையும்
ஆண்டு முழுவதும் சுமார் 1500மிமீ மழைவீழ்ச்சியும், தென்னை அறுவடைக்கு சுமார் 28 செல்சியஸ் வெப்பநிலையும் தேவை.ஆனால் கடந்த சில மாதங்களாக சில பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் மிகவும் வறண்ட வானிலையும் நிலவுகின்றமைாயால் இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, காலி மாவட்டத்தில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 80 ரூபா தொடக்கம் 120 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், அன்றாட உணவு தயாரிப்பதற்கு அத்தியாவசியமான தேங்காயின் விலை அதிகரித்துள்ளதால் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |